மே தினத்தைச் சிறப்பிக்கும் வாராந்த ஒன்றுகூடலும் புதிய பீடாதிபதிக்கான வரவேற்பு நிகழ்வும்

மே தினத்தைச் சிறப்பிக்கும் ஒன்றுகூடலும் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரியின் புதிய பீடாதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள அருணாசலம் குகனுக்கான வரவேற்பு நிகழ்வும் நேற்றுப் புதன்கிழமை (29.04.2026) காலை கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் ரதிலட்சுமி மண்டபத்தில் கலாசாலை முதல்வர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் இடம்பெற்றது.

கலாசாலையின் பிரதி முதல்வர் கணபதிப்பிள்ளை செந்தில்குமரன் அதிதிக்கான அறிமுக உரையை ஆற்றினார். யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரியின் புதிய பீடாதிபதி குகன் அதிதிப் பேச்சாளர் உரை நிகழ்த்தினார். கலாசாலையின் முதல்வர் லலீசன் நிறைவுரை நிகழ்த்தினார். அதிதி கலாசாலைச் சமூகத்தினரால் கெளரவிக்கப்பட்டார். மே தினத்தை முன்னிட்டுக் கலாசாலை ஆசிரிய மாணவர்களின் பல்வேறு மாணவர்களின் கலை நிகழ்வுகளும்  இடம்பெற்றன.