சிரேஷ்ட ஊடகவியலாளர் மாமனிதர். தராக்கி சிவராமின் 21 ஆம் ஆண்டு நினைவேந்தல்

படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் மாமனிதர். தராக்கி சிவராமின் 21 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு புதன்கிழமை (29.04.2026) மாலை யாழ் கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தலைமையில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
தராக்கி சிவராமின் உருவப் படத்துக்கு முன்பாக ஈகைச் சுடரேற்றப்பட்டு, மலர்மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஒருநிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து மலரஞ்சலியும், நினைவுரைகளும் இடம்பெற்றன.
நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை பரப்புச் செயலாளர் நடராஜர் காண்டீபன், கட்சியின் உள்ளுராட்சி சபைகளின் உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கலந்து கொண்டிருந்தனர்.