த.வெ.க. தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகள் என்ன?

சென்னை,சட்டசபை தேர்தலுக்கு முன்பு த.வெ.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமானவை வருமாறு:-

* குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500

*ஆண்டுக்கு 6 இலவச எல்.பி.ஜி. சிலிண்டர்கள்

* திருமணத்திற்கு 1 சவரன் தங்கம் மற்றும் பட்டுச்சேலை

* பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

* பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம்.

* 100 காமராஜர் தர குடியிருப்பு பள்ளிகள்

* ரூ.20 லட்சம் வரை கல்விக் கடன்

* குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் மருத்துவ காப்பீடு

* ஆண்டுதோறும் இலவச முழு உடல் பரிசோதனை

* போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு திட்டம்

* முதியோர், கைம்பெண், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 ஆயிரம் மாத ஓய்வூதியம்

* 200 யூனிட் இலவச மின்சாரம்.

* எல்லா வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு

* வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4 ஆயிரம்

* 5 லட்சம் அரசு வேலை வாய்ப்புகள்

* தொழில் தொடங்க ரூ.25 லட்சம் கடன்

* அரசு வேலைகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை

* விவசாயிகளுக்கு ரூ.15 ஆயிரம் ஆண்டு உதவித்தொகை

* பயிர்க்கடன் தள்ளுபடி .

* 100 சதவீதம் பயிர் காப்பீடு *

5 லட்சம் சோலார் பம்புகள்

* மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.27 ஆயிரம்

* அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் பரிசீலனை

* ஊழலற்ற வெளிப்படையான ஆட்சி

* மாவட்ட வாரியாக தனி திட்டங்கள்