“நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, தமிழகத்தில் 1952-ம் ஆண்டு முதல் சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. முதல் 15 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது.1967-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தி.மு.க. முதல் முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதல்-அமைச்சராக அண்ணா பொறுப்பேற்றுக்கொண்டார்.
1969-ம் ஆண்டு அவரது மறைவுக்கு பிறகு முதல்-அமைச்சராக கருணாநிதி பதவி ஏற்றார். 1971-ம் ஆண்டு தேர்தலிலும் தி.மு.க.வே வெற்றி பெற்று முதல்-அமைச்சராக கருணாநிதி தொடர்ந்தார்.அதன்பிறகு, தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆர். பிரிந்து அ.தி.மு.க.வை தொடங்கிய பிறகு 1977, 1980, 1985-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில், அ.தி.மு.க.வே தொடர் வெற்றிகளை பெற்று எம்.ஜி.ஆரே முதல்-அமைச்சராக இருந்தார்.
எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு நடந்த சட்டசபை தேர்தல்களில் தி.மு.க., அ.தி.மு.க. மாறி.. மாறி.. ஆட்சி அமைத்தது. அதாவது, 1989, 1996, 2006, 2021 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. கருணாநிதி மறைவுக்கு பிறகு 2021-ம் ஆண்டு, அவருடைய மகன் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார்.இப்படி, தமிழகத்தில் 1967-ம் ஆண்டு முதல் 2026-ம் ஆண்டு வரை தொடர்ந்து 59 ஆண்டுகள் திராவிட கட்சிகளின் ஆதிக்கமே மேலோங்கி இருந்த நிலையில், 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் புதிய வரவான தமிழக வெற்றிக் கழகம், முதல் தேர்தலிலேயே முத்திரை பதித்து வெற்றி வாகை சூடியுள்ளது. இதன் மூலம் 59 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆதித்தமும் முடிவுக்கு வந்துள்ளது.
59 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த தவெக தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன.
இதில் தவெக 107 இடங்களில் முன்னிலை பெற்று, சரித்திர சாதனை படைத்துள்ளது. திமுக கூட்டணி கட்சிகள் 74 தொகுதிகளில் முன்னிலை வகித்து வரும் நிலையில், மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;”மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம்.
தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன்.
நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்அனைவருக்கும் நன்றி !எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. – இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.”இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம்: மு.க.ஸ்டாலின் பதிவு
1. செய்யூர்: ராஜசேகர்: பெற்ற வாக்குகள்- 63,809: வாக்கு வித்தியாசம்- 5,668
2. மதுராந்தகம்: மரகதம் குமாரவேல்: பெற்ற வாக்குகள்- 69,284: வாக்கு வித்தியாசம்- 7,194
3. அணைக்கட்டு: வேலழகன்: பெற்ற வாக்குகள்- 76,302: வாக்கு வித்தியாசம்- 7,081
4. ஜோலார்பேட்டை: வீரமணி கே.சி.: பெற்ற வாக்குகள்- 78,633: வாக்கு வித்தியாசம்- 16,083
5. ஓசூர்: பாலகிருஷ்ணரெட்டி: பெற்ற வாக்குகள்- 1,09,867: வாக்கு வித்தியாசம்- 27,803
6. பாப்பிரெட்டிப்பட்டி: மரகதம் வெற்றிவேல்: பெற்ற வாக்குகள்- 1,01,829: வாக்கு வித்தியாசம்- 33,114
7. அரூர்:சம்பத்குமார்: பெற்ற வாக்குகள்- 75,523: வாக்கு வித்தியாசம்- 3,329
8. கீழ்பென்னாத்தூர்: ராமச்சந்திரன்: பெற்ற வாக்குகள்- 90,503: வாக்கு வித்தியாசம்- 30,465
9. செய்யாறு: முக்கூர் சுப்ரமணியன்: பெற்ற வாக்குகள்- 86,680: வாக்கு வித்தியாசம்- 21,081
10. மைலம்: சண்முகம் : பெற்ற வாக்குகள்- 82,353: வாக்கு வித்தியாசம்- 30,041
11. கங்கவல்லி: நல்லதம்பி. : பெற்ற வாக்குகள்- 73,167: வாக்கு வித்தியாசம்- 14,404
12. ஆத்தூர்: ஜெயசங்கரன்: பெற்ற வாக்குகள்- 80,843: வாக்கு வித்தியாசம்- 15,318
13. ஓமலூர்: மணி: பெற்ற வாக்குகள்- 1,12,246: வாக்கு வித்தியாசம்- 14,539
14. எடப்பாடி: எடப்பாடி பழனிசாமி: பெற்ற வாக்குகள்- 1,48,933: வாக்கு வித்தியாசம்- 98,110
15. சங்கரி: வெற்றிவேல்: பெற்ற வாக்குகள்- 87,342: வாக்கு வித்தியாசம்- 9,517
16. தாராபுரம்: சத்தியபாமா: பெற்ற வாக்குகள்- 81,100: வாக்கு வித்தியாசம்- 16,727
17. பவானி: கருப்பண்ணன்: பெற்ற வாக்குகள்- 75,577: வாக்கு வித்தியாசம்- 7,396
18. அந்தியூர்: ஹரிபாஸ்கர்: பெற்ற வாக்குகள்- 60,042: வாக்கு வித்தியாசம்- 1,260
19. நத்தம்: நத்தம் விஸ்வநாதன்: பெற்ற வாக்குகள்- 85708: வாக்கு வித்தியாசம்- 11,869
20. அரியலூர்: ராஜேந்திரன்: பெற்ற வாக்குகள்- 95,219: வாக்கு வித்தியாசம்- 24,498
21. நெய்வேலி: ராஜேந்திரன்: பெற்ற வாக்குகள்- 63,731: வாக்கு வித்தியாசம்- 10,962
22. பண்ருட்டி: மோகன்: பெற்ற வாக்குகள்- 78,398: வாக்கு வித்தியாசம்- 10,663
23. வேதாரண்யம்: மணியன்: பெற்ற வாக்குகள்- 59,172: வாக்கு வித்தியாசம்- 7,331
24. நன்னிலம்: காமராஜ்: பெற்ற வாக்குகள்- 1,03,462: வாக்கு வித்தியாசம்- 41,724
25. சங்கரன்கோவில்: டாக்டர். திலிபன் ஜெய்சங்கர்: பெற்ற வாக்குகள்- 64,865: வாக்கு வித்தியாசம்- 6,489
26. அம்பாசமுத்திரம்: டாக்டர்.இசக்கி சுப்பையா: பெற்ற வாக்குகள்- 65,589: வாக்கு வித்தியாசம்- 10,245 தேர்தல் முடிவுகள் வெளியீடு: அதிமுக இதுவரை வெற்றி பெற்றுள்ள தொகுதிகள் விபரம்;”
“சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், தவெக தலைவர் விஜய், தான் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளார். இந்த நிலையில், வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெறுவதற்காக விஜய் தனது வீட்டில் இருந்து வாக்கு எண்ணும் மையமான லயோலா கல்லூரிக்கு வருகை தந்தார். அவருக்கு தேர்தல் அலுவலர் வெற்றிக்கான சான்றிதழை வழங்கினார். அதனை பெற்றுக்கொண்ட விஜய், சான்றிதழை தூக்கிப் பிடித்தபடி, சிரித்த முகத்துடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
“பெரம்பூரில் வெற்றி: வெற்றிச் சான்றிதழை பெற்றுக்கொண்ட விஜய்.
1 துறைமுகம்: பி கே சேகர்பாபு: பெற்ற வாக்குகள் 45,254: வாக்கு வித்தியாசம்: 11,750 2 சேப்பாக்கம்-
திருவல்லிக்கேணி: உதயநிதி ஸ்டாலின்: பெற்ற வாக்குகள் 62,992: வாக்கு வித்தியாசம்: 71,40 3 கூடலூர்: திராவிடமணி.எம்: பெற்ற வாக்குகள் 65,590: வாக்கு வித்தியாசம்: 22,833 4 குன்னூர்: எம். ராஜு: பெற்ற வாக்குகள் 50,470: வாக்கு வித்தியாசம்: 8,099 5 பொள்ளாச்சி: கே. நித்யானந்தன்: பெற்ற வாக்குகள் 62,013: வாக்கு வித்தியாசம்: 4,627 6 வால்பாறை: குட்டி (அலியாஸ்) சுதாகர்: பெற்ற வாக்குகள் 54,671: வாக்கு வித்தியாசம்: 9,371 7 உடுமலைப்பேட்டை: ஜெயக்குமார் எம்.: பெற்ற வாக்குகள் 68,549: வாக்கு வித்தியாசம்: 2,882 8 மடத்துக்குளம்: ஆர் ஜெயராமகிருஷ்ணன்: பெற்ற வாக்குகள் 70,458: வாக்கு வித்தியாசம்: 15,968 9 ஒட்டன்சத்திரம்: சக்கரபாணி. ஆர்: பெற்ற வாக்குகள் 93,099: வாக்கு வித்தியாசம்: 43,249 10 திருச்சிராப்பள்ளி (மேற்கு): கே.என்.நேரு: பெற்ற வாக்குகள் 88,235: வாக்கு வித்தியாசம்: 4,786 11 மணச்சநல்லூர்: கதிரவன். எஸ்: பெற்ற வாக்குகள் 81,447: வாக்கு வித்தியாசம்: 12,364 12 சீர்காழி: செந்தில்செல்வன்.ஆர்: பெற்ற வாக்குகள் 71,449: வாக்கு வித்தியாசம்: 11,417 13 நாகப்பட்டினம்: எம்.எச்.ஜவாஹிருல்லாஹ்: பெற்ற வாக்குகள் 56,305: வாக்கு வித்தியாசம்: 9,781 14 திருவாரூர்: கலைவாணன் பூண்டி கே: பெற்ற வாக்குகள் 93,408: வாக்கு வித்தியாசம்: 18,148 15 திருவிடைமருதூர்: கோவி.செழியன்: பெற்ற வாக்குகள் 79,951: வாக்கு வித்தியாசம்: 14,116 16 ஒரத்தநாடு: ஆர். வைத்திலிங்கம்: பெற்ற வாக்குகள் 86,759: வாக்கு வித்தியாசம்: 35,028 17 ஆலங்குடி: சிவ.வி.மெய்யநாதன்: பெற்ற வாக்குகள் 64,929: வாக்கு வித்தியாசம்: 12,977 18 ஆண்டிப்பட்டி: மகாராஜன்.ஏ: பெற்ற வாக்குகள் 74,324: வாக்கு வித்தியாசம்: 9,554 19 பரமக்குடி: வழக்கறிஞர். கதிரவன். கே.கே: பெற்ற வாக்குகள் 59,161: வாக்கு வித்தியாசம்: 3,548 20 ராமநாதபுரம்:காதர்பட்சா முத்துராமலிங்கம்: பெற்ற வாக்குகள் 89,137: வாக்கு வித்தியாசம்: 12,459 21 விளாத்திகுளம்: மார்க்கண்டயன் ஜி வி: பெற்ற வாக்குகள் 58,395: வாக்கு வித்தியாசம்: 8,228 22 திருச்செந்தூர்: அனிதா ஆர். ராதாகிருஷ்ணன்: பெற்ற வாக்குகள் 72,723: வாக்கு வித்தியாசம்: 5,872 23 ஆலங்குளம்: பால் மனோஜ் பாண்டியன்: பெற்ற வாக்குகள் 69,170: வாக்கு வித்தியாசம்: 7,798 24 பாளையங்கோட்டை: எம்.அப்துல் வஹாப்: பெற்ற வாக்குகள் 79,744: வாக்கு வித்தியாசம்: 13,805 தேர்தல் முடிவுகள் வெளியீடு: திமுக இதுவரை வெற்றி பெற்றுள்ள தொகுதிகள் விபரம்;”
“சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து வெற்றிச்சான்றிதழை பெறுவதற்காக வந்த உதயநிதி ஸ்டாலின், செய்தியாளர்களிடம் பேசியதாவது;”மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறேன். மக்களுக்காக தொடர்ந்து உழைப்போம். திருவல்லிக்கேணி தொகுதி மக்களுக்காக தொடர்ந்து உழைப்பேன். வெற்றிக்காக உழைத்த கட்சியினருக்கு நன்றி. புதிதாக தேந்தெடுக்கப்பட்டுள்ள கட்சிக்கு வாழ்த்துகள்.” என்றார்.
:”புதிதாக தேந்தெடுக்கப்பட்டுள்ள கட்சிக்கு வாழ்த்துகள்: உதயநிதி ஸ்டாலின்”, புதுடெல்லி,சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், விஜய்யின் தவெக 107 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த நிலையில், தமிழக அரசியல் புதிய சரித்திரம் படைத்த விஜய்க்கு பிரதமர் மோடி மற்றும் ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்திதமிழக சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவளித்த தமிழக வாக்காளர்களுக்கு நன்றிகள். மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும், அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதிலும் நாங்கள் எப்போதும் முன்னணியில் இருப்போம்.தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பான செயல்பாட்டிற்கு வாழ்த்துகள். தமிழகத்தின் முன்னேற்றத்தையும், அதன் மக்களின் நல்வாழ்வையும் முன்னெடுத்துச் செல்வதில் மத்திய அரசு தனது முழு முயற்சியையும் செலுத்தும்.”இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அதேபோல, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தியும் விஜய்க்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1. பூந்தமல்லி – பிரகாசம்.ஆர்: பெற்ற வாக்குகள் – 161309 வாக்கு வித்தியாசம் – 72740 இரண்டாம் இடம் கிருஷ்ணசாமி (திமுக) பெற்ற வாக்குகள் – 88569
2 மாதவரம் – எம்.எல்.விஜய்பிரபு: பெற்ற வாக்குகள் – 190462 வாக்கு வித்தியாசம்: 94985 இரண்டாம் இடம் சுதர்சனம் (திமுக) பெற்ற வாக்குகள் – 95477
3 கொளத்தூர் – வி.எஸ். பாபு – பெற்ற வாக்குகள் 82997 – வாக்கு வித்தியாசம்; 8795 இரண்டாம் இடம் மு.க.ஸ்டாலின் (திமுக) பெற்ற வாக்குகள் – 74202
4 திரு.வி.க.நகர் – எம். ஆர். பல்லவி – பெற்ற வாக்குகள் -69125 ; வாக்கு வித்தியாசம் -22,333 இரண்டாம் இடம் ரவிச்சந்திரன் (திமுக) பெற்ற வாக்குகள் – 46792
5 ராயபுரம்: கே.வி. விஜய் தாமு: பெற்ற வாக்குகள்: 59,091 வாக்கு வித்தியாசம்: 14249
6 அண்ணா நகர்: வி.கே.ராம்குமார்: பெற்ற வாக்குகள்: 71,375 – வாக்கு வித்தியாசம்: 21363
7 தியாகராயநகர்: ஆனந்த் என்: பெற்ற வாக்குகள்: 51632 வாக்கு வித்தியாசம்:13027
8 மயிலாப்பூர்: வெங்கடரமணன்: பெற்ற வாக்குகள்: 70,070 வாக்கு வித்தியாசம்: 28972
9 உத்திரமேரூர்: முனிரத்தினம்.ஜே: பெற்ற வாக்குகள்: 84917 வாக்கு வித்தியாசம்: 14223
10 ராசிபுரம்: லோகேஷ் தமிழ்செல்வன்: பெற்ற வாக்குகள்: 74808: வாக்கு வித்தியாசம்: 14511
11 சேந்தமங்கலம்: பி சந்திரசேகர்: பெற்ற வாக்குகள்: 68815 : வாக்கு வித்தியாசம்: 2655
12 ஈரோடு (கிழக்கு: எம்.விஜய் பாலாஜி : பெற்ற வாக்குகள்: 69747 : வாக்கு வித்தியாசம்: 23966 1
3 மொடக்குறிச்சி: டி.சண்முகன்: பெற்ற வாக்குகள்: 60715 : வாக்கு வித்தியாசம்: 2430
14 கோபிச்செட்டிபாளையம்: செங்கோட்டையன்: பெற்ற வாக்குகள்: 82612: வாக்கு வித்தியாசம்: 16620 1
5 பவானிசாகர்: வி.பி.தமிழ்செல்வி: பெற்ற வாக்குகள்: 72391 : வாக்கு வித்தியாசம்: 4569
16 கவுண்டம்பாளையம்: கனிமொழி சந்தோஷ்: பெற்ற வாக்குகள்: 146466 : வாக்கு வித்தியாசம்: 42140
17 முசிறி: எம்.விக்னேஷ்: பெற்ற வாக்குகள்: 71281 : வாக்கு வித்தியாசம்: 17442
18 தஞ்சாவூர்: ஆர். விஜயசரவணன் : பெற்ற வாக்குகள்: 87705 : வாக்கு வித்தியாசம்: 16955
19 அறந்தாங்கி(183) முகமது பர்வாஸ்: ஜே பெற்ற வாக்குகள்: 73244 : வாக்கு வித்தியாசம்: 10062
20 மதுரை வடக்கு(191) அ.கல்லை: பெற்ற வாக்குகள்: 72853 : வாக்கு வித்தியாசம்: 18038
21 மதுரை சென்ட்ரல்(193) மதர் பதுருதீன்: பெற்ற வாக்குகள்: 63414 : வாக்கு வித்தியாசம்: 19128
22 ராஜபாளையம்: ஜெகதீஸ்வரி: பெற்ற வாக்குகள்: 65548 : வாக்கு வித்தியாசம்: 10605
23 ஸ்ரீவைகுண்டம்: சரவணன்: பெற்ற வாக்குகள்: 588
14 : வாக்கு வித்தியாசம்: 1186
24 திருநெல்வேலி: முருகன்.ஆர்.எஸ். பெற்ற வாக்குகள்: 75840 : வாக்கு வித்தியாசம்: 11414
25 நாங்குநேரி: ரெட்டியார்பட்டி வி. நாராயணன்: பெற்ற வாக்குகள்: 74952 : வாக்கு வித்தியாசம்: 16419
26 ராதாபுரம்: டாக்டர்.சதீஷ் கிறிஸ்டோபர்: பெற்ற வாக்குகள்: 69947 : வாக்கு வித்தியாசம்: 12313
தேர்தல் முடிவுகளை வெளியிட்ட தேர்தல் ஆணையம்.. தவெக இதுவரை வெற்றி பெற்றுள்ள தொகுதிகள் விபர சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், தவெக தலைவர் விஜய், தான் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளார்.
இந்த நிலையில், வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெறுவதற்காக விஜய் தனது வீட்டில் இருந்து நுங்கம்பாக்கம் புறப்பட்டுள்ளார். அவருக்கு வழி நெடுகிலும் மக்கள் வரவேற்று வருகின்றனர்.
“வெற்றிச் சான்றிதழை பெற புறப்பட்ட விஜய்.. மக்கள் வழியெங்கும் உற்சாக வரவேற்பு மதுரை மத்திய தொகுதியில் திமுகவின் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் நடிகரும், இயக்குநருமான சுந்தர் சி, அதிமுக சார்பில் போட்டியிட்டனர். எனவே இந்த தொகுதி நட்சத்திர தொகுதியாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில், இந்த தொகுதியில் தவெக வேட்பாளர் மதர் பத்ருதீன் 19128 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். பிடிஆர் மற்றும் சுந்தர் சி ஆகியோர் முறையே அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். மதுரை மத்திய தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்;மதர் பத்ருதீன் (தவெக) – 63,414 – வெற்றி பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் (திமுக) – 44,286 சுந்தர் சி (அதிமுக) – 33,538 அப்துல் ஹக்கீம் (நாதக) – 5549 “, :”மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்ட பிடிஆர், சுந்தர் சி தோல்வி.! தவெக வெற்றி
“மயிலாப்பூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வெங்கடரமணன் 28,972 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். பாஜகவின் மூத்த தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் இந்த தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அவர் 32,328 வாக்குகளுடன் 3-வது இடத்தையே பிடித்துள்ளார். மயிலாப்பூர் தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்;வெங்கடரமணன் (தவெக) – 70,070 – வெற்றி வேலு (திமுக) – 41098 தமிழிசை சவுந்தரராஜன் (பாஜக) – 32,328 அருண் (நாதக) – 4,499 ” மயிலாப்பூரில் போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜன் தோல்வி: தவெக வெற்றி”
:”நாங்குநேரி தொகுதியில் தவெக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 16,419 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். நாங்குநேரி தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்;ரெட்டியார்பட்டி நாராயணன் (தவெக) – 74,952 – வெற்றி ரூபி.ஆர்.மனோகரன் (காங்கிரஸ்) – 58,533 இசக்கிமுத்து(அமமுக) – 38,316 செல்வம் (நாதக) – 17,618
:”நாங்குநேரி தொகுதியில் தவெக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் வெற்றி” “தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், விஜய்யின் தவெக 110 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிலையில், தேர்தலை புறக்கணித்த கிராமத்திலும் தவெக அலை வீசியுள்ளது. நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே இரட்டை கொலைக்கு நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி தேர்தலை புறக்கணித்த பெரும்பத்து கிராமத்தில் 969 வாக்காளர்களில் 5 பேர் மட்டும் வாக்களித்தனர். அதில் 3 ஓட்டுகள் தவெகவுக்கும் எஞ்சிய 2 ஓட்டுகளில் 1 ஓட்டு காங்கிரசுக்கும் 1 ஓட்டு சுயேச்சைக்கும் விழுந்துள்ளது.
தேர்தலை புறக்கணித்த கிராமத்திலும் தவெக அலை
“:”கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் செங்கோட்டையன் 16,620 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்;செங்கோட்டையன் (தவெக) – 82,612 – வெற்றி நல்லசிவம் (திமுக) – 65,992 பிரபு (அதிமுக) – 56,232 சீதாலட்சுமி (நாதக) – 8,137 ”
கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் செங்கோட்டையன் வெற்றி”, :”திருச்சி மேற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் கே.என்.நேரு 4,786 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். திருச்சி மேற்கு தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்;கே.என்.நேரு (திமுக) – 88,235 – வெற்றி ராமமூர்த்தி (தவெக) – 83,449 ராஜசேகரன் (அமமுக) – 14,136புவனேஸ்வரி (நாதக) – 7,470 “, “திருச்சி மேற்கு தொகுதியில் அமைச்சர் கே.என்.நேரு வெற்றி “சென்னை, திரு.வி.க. நகர் தொகுதியில் தவெக வேட்பாளர் பல்லவி 22,333 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அண்ணாநகர் தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்;பல்லவி (தவெக) – 69,125 – வெற்றி ரவிச்சந்திரன் (திமுக) – 46,792 போர்கோடி ஆம்ஸ்ட்ராங் (அதிமுக) – 23,304 ஜகதேஷ் சந்தர் (நாதக) – 2,658 “, திரு.வி.க. நகர் தொகுதியில் தவெக வேட்பாளர் பல்லவி வெற்றி
“தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்னப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அண்ணாநகர் தொகுதியில் தவெக வேட்பாளர் ராம்குமார் 21,363 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அண்ணாநகர் தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்;ராம்குமார் (தவெக) – 71,375- வெற்றி சித்ரராசு (திமுக) – 50,012கோகுல இந்திரா (அதிமுக) – 34,382சங்கர் (நாதக) – 4,839 “,
“அண்ணாநகர் தொகுதியில் தவெக வேட்பாளர் ராம்குமார் வெற்றி”
“தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்னப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மேலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதன் 2,724 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மேலூர் தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்;விஸ்வநாதன் (காங்கிரஸ்) – 60,080 – வெற்றி மதுரைவீரன் (தவெக) – 57,356பெரியபுல்லன் (எ) செல்வம் (அதிமுக) – 56,744கோட்டைகுமார் (நாதக) – 9,570
மேலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதன் வெற்றி”,
“தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், விஜய்யின் தவெக 110 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிலையில், தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர் விஜய சரவணன் 16,955 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தஞ்சாவூர் தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்;விஜய சரவணன் (தவெக) – 87,705 – வெற்றிராமநாதன் (திமுக) – 70,750கருப்பு முருகானந்தம் (அதிமுக) – 26,790கிருஷ்ணகுமார் (நாதக) – 9,383 ” “தஞ்சாவூரில் தவெக வேட்பாளர் விஜய சரவணன் வெற்றி”,
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், விஜய்யின் தவெக 110 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிலையில், வால்பாறை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் குட்டி என்ற சுதாகர் 9,371 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். வால்பாறை தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்;குட்டி என்ற சுதாகர் (திமுக) – 54,671ஸ்ரீதரன் (தவெக) – 45,300லஷ்மணசிங் (அதிமுக) – 43,728உமாதேவி (நாதக) – 5,256 “, :”
வால்பாறையில் திமுக வேட்பாளர் குட்டி என்ற சுதாகர் வெற்றி”,”
:”தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், விஜய்யின் தவெக 110 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிலையில், குன்னூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ராஜு 8,099 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
குன்னூர் தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்;எம்.ராஜு (திமுக) – 50,470ராமு (அதிமுக) – 42,371தங்கராஜு (தவெக) – 42,225தீனு (நாதக) – 4,695″,”
“:”குன்னூரில் திமுக வேட்பாளர் ராஜு வெற்றி”,
சென்னை,தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், விஜய்யின் தவெக 110 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜன் கூறி இருப்பதாவது;”அரசியலில் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம்.. தோற்கலாம். தேர்தல் முடிவுகளை விஜய் அலை என்று சொல்வதா? அல்லது திமுக வெறுப்பு அலை என்று சொல்வதா என தெரிந்துகொள்ள வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். தோல்வியடைந்த வேட்பாளர்கள் மக்களுக்காக பணியாற்ற வேண்டும். எங்கள் அரசியல் இன்னும் தீவிரமாக தொடரும்.”இவ்வாறு அவர் கூறினார்.
“தேர்தல் முடிவுகள்: விஜய் அலை என்று சொல்வதா, திமுக வெறுப்பு அலை என்று சொல்வதா? – தமிழிசை பேட்டி”, தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், விஜய்யின் தவெக 110 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிலையில், கூடலூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் திராவிட மணி 22,833 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். கூடலூர் தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்; திராவிடமணி (திமுக) – 65,590 பொன்.ஜெயசீலன் (அதிமுக) – 42,757 தீபக் சாய் கிஷோர் (தவெக) – 34,962 கார்த்திக் (நாதக) –
கூடலூர் தொகுதியில் திமுகவின் திராவிட மணி வெற்றி”
:”தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், விஜய்யின் தவெக 110 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. ஆளும் திமுக கூட்டணியானது 66 தொகுதிகளிலேயே முன்னிலை பெற்றுள்ளது. முன்னதாக, அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் வெற்றியை கொண்டாடும் வகையில் பட்டாசுகள், நிர்வாகிகளுக்காக பந்தல்கள் போடப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது அண்ணா அறிவாலயத்தில் போடப்பட்டிருந்த பந்தல்கள் அகற்றப்பட்டு வருகின்றன. திமுக பின்னடைவை சந்தித்துள்ளதால் அண்ணா அறிவாலயம் களையிழந்துள்ளது.
அண்ணா அறிவாலயத்தில் போடப்பட்டிருந்த பந்தல்கள் அகற்றம்
தவெக தலைவர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் குடும்பத்தினருடன் தவெக வெற்றியைக் கொண்டாடும் வீடியோ வெளியாகியுள்ளது. அதில், விஜய் குடும்பத்தினர் அவரது தந்தையை கட்டிப்பிடித்து கொண்டாடி வருகின்றனர்.
குடும்பமாக ஷோபாவில் அமர்ந்து கொண்டு தவெக சின்னமான விசிலை ஊதி தங்களது மகிழ்ச்சியை கொண்டாடினர். தமிழக தேர்தல் வரலாற்றில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக இந்தத் தேர்தல் முடிவுகள் அமையுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
“விஜயின் உறவினர்கள் விசில் அடித்து கொண்டாட்டம்
“காட்டுமன்னார் கோயில் தொகுதி 8வது சுற்று முடிவில் 6,013 வாக்குகள் வித்தியாசத்தில் விசிக வேட்பாளர் ஜோதிமணி முன்னிலையில் உள்ளார்.
விருதுநகர் தொகுதியில் 10வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் தவெக வேட்பாளர் செல்வம் 1,809 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் பின்னடைவை சந்தித்துள்ளார்.
விஜயபிரபாகரன் பின்னடைவு
234 சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று (திங்கட்கிழமை) எண்ணப்பட்டு வருகின்றன. இதன் முடிவில் யார் அரியணையில் அமரப்போகிறார்கள் என்பது தெரியவரும். தற்போது நடைபெற்று வரும் தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆரம்ப கட்டத்திலிருந்தே முன்னிலை வகித்து வருகிறது.இந்நிலையில் 7 வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் தவெக தலைவர் விஜய் 16,452 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். த.வெ.க. – 40,339 (விஜய்)தி.மு.க. – 23,887 (ஆர்.டி.சேகர்)பா.ம.க. – 3,381 (திலகபாமா)நா.த.க. – 1,902 (வெற்றி தமிழன்)”
வாக்கு எண்ணிக்கை: பெரம்பூர் தொகுதியில் 16,452 வித்தியாசத்தில் விஜய் முன்னிலை :”234 சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று (திங்கட்கிழமை) எண்ணப்பட்டு வருகின்றன. இதன் முடிவில் யார் அரியணையில் அமரப்போகிறார்கள் என்பது தெரியவரும்.
தற்போது நடைபெற்று வரும் தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆரம்ப கட்டத்திலிருந்தே முன்னிலை வகித்து வருகிறது.இந்நிலையில் 11 சுற்றுகளின் முடிவில் கொளத்தூர் தொகுதியில் 8,019 வாக்கு வித்தியாசத்தில் தமிழக வெற்றி கழகம் முன்னிலை வகித்து வருகிறது. த.வெ.க. – 45,073 (வி.எஸ்.பாபு)தி.மு.க. – 37,054 (மு.க.ஸ்டாலின்)அ.தி.மு.க. – 11,405 (சந்தான கிருஷ்ணன்)நா.த.க. – 3,077 (சவுந்திர பாண்டியன் 11 சுற்றுகள் முடிவு: கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பின்னடைவு “:”234 சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று (திங்கட்கிழமை) எண்ணப்பட்டு வருகின்றன.
இதன் முடிவில் யார் அரியணையில் அமரப்போகிறார்கள் என்பது தெரியவரும். தற்போது நடைபெற்று வரும் தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆரம்ப கட்டத்திலிருந்தே முன்னிலை வகித்து வருகிறது.இந்நிலையில் மதுரையில் 10 தொகுதிகளில் 7-இல் தவெக முன்னிலை வகிக்கிறது. இதன்படி சோழவந்தான், உசிலம்பட்டி, திருப்பரங்குன்றம், மதுரை மத்தி, மதுரை மேற்கு உள்ளிட்ட 7 தொகுதிகளில் த.வெ.க. முன்னிலையில் உள்ளது.
வாக்கு எண்ணிக்கை தற்போதைய முன்னணி நிலவரம்:-த.வெ.க. – 107அ.தி.மு.க. – 66தி.மு.க. – 63நா.த.க. – 0 ” “மதுரையில் 10 தொகுதிகளில் 7-இல் த.வெ.க. முன்னிலை வகிக்கிறது”, : 59 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆதிக்கத்திற்கு முடிவு: தமிழகத்தில் ஆட்சி அமைக்கிறது த.வெ.க..!
* கொளத்தூர் தொகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பின்னடைவு.* வடக்கு மண்டலத்தில் மொத்தம் உள்ள 82 தொகுதிகளில் 43 இடங்களில் தவெக முன்னிலையில் உள்ளது. அதிமுக கூட்டணி 24 இடங்களிலும், திமுக கூட்டணி 15 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. * மேலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக வேட்பாளரை விட 2,731 வாக்குகள் கூடுதலாக பெற்று காங்கிரஸ் வேட்பாளர் பெற்றுள்ளார்.* கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் 10வது சுற்று முடிவில் 9,105 வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் செங்கோட்டையன் முன்னிலை வகித்து வருகிறார்.
* மதுரை மத்திய தொகுதியில் 8 சுற்று முடிவில் தவெக வேட்பாளர் 13,956 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். * காட்டுமன்னார்கோவில் தொகுதியில் 5 சுற்று முடிவில் 538 வாக்குகள் வித்தியாசத்தில் விசிக முன்னிலையில் உள்ளது.* ரிஷிவந்தியம் தொகுதியில் 5 சுற்று முடிவில் 60 வாக்கு வித்தியாசத்தில் தவெக முன்னிலையில் உள்ளது.* சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் 3,337 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் பெரியகருப்பன் முன்னிலையில் உள்ளார்.
* கும்பகோணம் தொகுதியில் 10 வது சுற்று முடிவில் 35,295 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்பழகன் முன்னிலையில் உள்ளார். * துறையூர் தொகுதியில் 7வது சுற்று முடிவில் தவெக வேட்பாளர் ரவிசங்கர் முன்னிலையில் உள்ளார். * விருத்தாச்சலம் தொகுதியில் 7வது சுற்று முடிவில் பிரேமலதா விஜயகாந்த் 22,588 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். * திருமயம் தொகுதியில் 9வது சுற்று முடிவில் 1307 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ரகுபதி முன்னிலையில் உள்ளார்.*
கடையநல்லூர் தொகுதியில் 9வது சுற்று முடிவில் 2,490 வாக்கு வித்தியாசத்தில் மதிமுக முன்னிலையில் உள்ளது. * தூத்துக்குடி தொகுதியில் தவெகவின் ஸ்ரீநாத் முன்னிலையில் உள்ளார். * ஆலந்தூர் தொகுதியில் தவெகவின் ஹரீஷ் முன்னிலையில் உள்ளார். * மதுரவாயல் தொகுதியில் தவெகவின் ரேவந்த் சரண் முன்னிலையில் உள்ளார்.* துறைமுகம் தொகுதியில் சேகர்பாபு முன்னிலையில் உள்ளார். “சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை: யார் யார் முன்னிலை..? ”
:”தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆரம்ப கட்டத்திலிருந்தே முன்னிலை வகித்து வருகிறது. வாக்கு எண்ணிக்கை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில், தவெக முன்னிலையில் இருப்பது அவரது ரசிகர்கள் மற்றும் அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில் தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன.
அந்த வகையில், தற்போதுவரை தவெகவின் விஜய் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் ஒரு தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க, ஒரு கட்சி அல்லது கூட்டணிக்கு 118 தொகுதிகள் தேவைப்படுகின்றன. இந்த சூழலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 தொகுதிகளுக்கு மேல் முன்னிலையில் உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.வாக்கு எண்ணிக்கை முன்னணி நிலவரம்:-த.வெ.க. – 107அ.தி.மு.க. – 69தி.மு.க. – 58நா.த.க. – எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ரிசல்ட்: தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்குமா த.வெ.க..? தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆரம்ப கட்டத்திலிருந்தே முன்னிலை வகித்து வருகிறது. வாக்கு எண்ணிக்கை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில், தவெக முன்னிலையில் இருப்பது அவரது ரசிகர்கள் மற்றும் அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில் தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன.
அந்த வகையில், தற்போதுவரை விஜய்-யின் தவெக 100-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதனிடையே தமிழ்நாட்டில் உள்ள 46 தனித்தொகுதிகளில் 24 தொகுதிகளில் தவெக முன்னிலை வகித்து வருகிறது. தொடர்ந்து தனித்தொகுதிகளில் 11-ல் அதிமுகவும், 7-ல் திமுகவும், விசிக, சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதியில் முன்னிலையில் உள்ளது. வாக்கு எண்ணிக்கை முன்னணி நிலவரம்:-த.வெ.க. – 108அ.தி.மு.க. – 74தி.மு.க. – 52நா.த.க. – “வாக்கு எண்ணிக்கை: முந்துகிறார் விஜய்.. 2-ம் இடத்தில் அ.தி.மு.க.. தொடந்து பின்னடைவில் தி.மு.க.”, தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆரம்ப கட்டத்திலிருந்தே முன்னிலை வகித்து வருகிறது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தவெக முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் சென்னை கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் 5-வது சுற்றிலும் பின்னடைவை சந்தித்துள்ளார்.வாக்கு எண்ணிக்கை முன்னணி நிலவரம்:-த.வெ.க. – 106அ.தி.மு.க. – 74தி.மு.க. – 54நா.த.க. – :”கொளத்தூரில் தொடர்ந்து 5-வது சுற்றிலும் மு.க.ஸ்டாலின் பின்னடைவு :”நெல்லை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் அம்பாசமுத்திரம் தவிர மீதமுள்ள 4 தொகுதியிலும் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை வகித்து வருகிறது. குறிப்பாக திமுக வேட்பாளரான சபாநாயகர் அப்பாவு ராதாபுரம் பகுதியில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். 4
வது சுற்று முடிவில் அவர் 13,224 வாக்குகள் பெற்ற நிலையில், தவெக வேட்பாளர் கிறிஸ்டோபர் 14,950 வாக்குகள் பெற்று 1,726 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். பாஜக வேட்பாளர் 10,545 வாக்குகள் பெற்று 3வது இடத்தில் உள்ளார். சபாநாயகர் அப்பாவு ராதாபுரம் தொகுதியில் தொடர்ந்து பின்னடைவு தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆரம்ப கட்டத்திலிருந்தே முன்னிலை வகித்து வருகிறது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தவெக முன்னிலையில் உள்ளது.
வாக்கு எண்ணிக்கை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில், தவெக முன்னிலையில் இருப்பது அவரது ரசிகர்கள் மற்றும் அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில் தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில், தற்போதுவரை தவெகவின் விஜய் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் உள்ளது.வாக்கு எண்ணிக்கை முன்னணி நிலவரம்:-த.வெ.க. – 105அ.தி.மு.க. – 78தி.மு.க. – 50நா.த.க. – “யாரும் எதிர்பாராத திருப்பம்.. தி.மு.க.வுக்கு பெரும் பின்னடைவு.. தொடர்ந்து முன்னிலையில் த.வெ.க தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆரம்ப கட்டத்திலிருந்தே முன்னிலை வகித்து வருகிறது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தவெக முன்னிலையில் உள்ளது. வாக்கு எண்ணிக்கை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில், தவெக முன்னிலையில் இருப்பது அவரது ரசிகர்கள் மற்றும் அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வெற்றியின் தொடர்ச்சியாக, சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள விஜய் இல்லத்தின் முன்பு குவிந்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், விஜய் இல்லத்திற்குச் செல்லும் சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, வாகன போக்குவரத்து முறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக போலீசாருடன் துணை ராணுவத்தினர் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் நீலாங்கரை இல்லத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு” தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.
இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அதிக தொகுதிகளில் தவெக முன்னிலை வகித்து அதிர வைத்து வருகிறது.
த.வெ.க. – 104அ.தி.மு.க. – 76தி.மு.க. – 52நா.த.க. – 0இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளான நெல்லை, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி உள்ளிட்ட 5 சட்டசபை தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர். :”பரபரப்பாக நடந்து வரும் வாக்கு எண்ணிக்கை: நெல்லை மாவட்டத்தை வாரி சுருட்டுகிறது த.வெ.க. தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில் காலை 10 மணி நிலவரப்படி100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் த.வெ.க. முன்னிலை வகித்து வருகிறது.
இதன்படித.வெ.க. – 103அ.தி.மு.க. – 80தி.மு.க. – 48நா.த.க. – 0தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, சென்னையில் 16 இடங்களில் த.வெ.க. முன்னிலை வகித்து வருகிறது. தமிழகம் முழுவதும் நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில் மு.க.ஸ்டாலின் உள்பட 31 அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை நிலவரம்: மு.க.ஸ்டாலின் உள்பட 31 அமைச்சர்கள் பின்னடைவு” “தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.
இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அதிக தொகுதிகளில் தவெக முன்னிலை வகித்து வருகிறது. இதன்படித.வெ.க. – 86அ.தி.மு.க. – 49தி.மு.க. – 46நா.த.க. – 0 அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை: முதலிடத்தில் த.வெ.க. தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அதிக தொகுதிகளில் தவெக முன்னிலை வகித்து வருகிறது. இதன்படித.வெ.க. – 62தி.மு.க. – 43அ.தி.மு.க. – 38நா.த.க. – :”வாக்கு எண்ணிக்கை நிலவரம்: அதிக தொகுதிகளில் த.வெ.க. முன்னிலை.
:”தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 9 மணி நிலவரம்:தி.மு.க. – 47த.வெ.க. – 41அ.தி.மு.க. – 35நா.த.க. – “காலை 9 மணி நிலவரம்: தி.மு.க. முன்னிலை.. இரண்டாம் இடத்தில் த.வெ.க. :”தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் காரைக்குடி தொகுதியில் சீமான் பின்னடைவை சந்தித்து வருகிறார். த.வெ.க. வேட்பாளர் பிரபு முன்னிலை வகித்து வருகிறார். காரைக்குடி தொகுதியில் சீமான் பின்னடைவு – த.வெ.க. முன்னிலை தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது.
தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் பின்னடைவை சந்தித்துள்ளார். த.வெ.க. முன்னிலை வகித்து வருகிறது. கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் பின்னடைவு: த.வெ.க. முன்னிலை” தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.
இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகித்து வருகிறார். சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.
இந்நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் (இவிஎம்) பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இந்த நிலையில் திருச்சி கிழக்கு தொகுதியில் த.வெ.க. தலைவர் விஜய் பின்னடைவை சந்தித்து வருகிறார். தி.மு.க. வேட்பாளர் இனிகோ இருதயராஜ் முன்னிலையில் இருந்து வருகிறார்.
திருச்சி கிழக்கு தொகுதி: த.வெ.க. தலைவர் விஜய் பின்னடைவு – தி.மு.க. முன்னிலை” தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன.இந்த நிலையில், கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் (46+) முன்னிலையில் உள்ளார். அதேபோல எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி (13+) முன்னிலையில் உள்ளார்.
“தபால் வாக்குகள் எண்ணிக்கை: மு.க.ஸ்டாலின் – எடப்பாடி பழனிசாமி முன்னிலை , தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன.இந்த நிலையில், பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் 75 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் 25 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். இதைபோல திரு.வி.க.நகர் தொகுதியில் தவெக வேட்பாளர் எம்.ஆர்.பல்லவி 10 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்
“தபால் வாக்கு எண்ணிக்கை: பெரம்பூரில் த.வெ.க. தலைவர் விஜய் முன்னிலை”
“த.வெ.க. தலைவர் விஜய் இல்லத்தின் வெளியே ஒரு துணை ஆணையர், ஒரு உதவி ஆணையர், ஒரு ஆய்வாளர், ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் CRPF வீரர்கள் உட்பட 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் விஜய் இல்லத்திற்கு வர கூடிய கபாலீஸ்வரர் நுழைவாயிலில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். ரசிகர்கள், தொண்டர்கள் அதிகளவில் கூடாமல் இருக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு வளையத்தில் த.வெ.க. தலைவர் விஜய் இல்லம்”
“காலை 8 மணிக்கு முன்பு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் சீல் அனைத்து வேட்பாளா்கள் முன்னிலையில் அகற்றப்பட்டது. இதைத் தொடா்ந்து, காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது. இதனைத்தொடர்ந்து காலை 8.30 மணியளவில் மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கப்படும். முதல் சுற்று எண்ணிக்கை முடிக்கப்பட்டு முன்னிலை விவரங்கள் 9 மணிக்கு தெரிவிக்கப்படும். இதைத் தொடா்ந்து, அடுத்தடுத்த சுற்றுகளின் முடிவுகள் வெளியிடப்படும்.இதேபோல புதுச்சேரி, கேரளம், அசாம், மேற்குவங்காளத்தில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ண தொடங்கப்பட்டுள்ளது.
பரபரப்பாகும் சட்டசபை தேர்தல் களம்.. தொடங்கியது வாக்கு எண்ணிக்கை
:” சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையங்களில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன்படி ஒரு சட்டசபை தொகுதிக்கு ஒரு தேர்தல் பார்வையாளர், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கண்காணிப்பில் வாக்கு எண்ணும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.இதுதவிர 70 கம்பெனி துணை ராணுவ படையினர் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.
இதுதவிர அசம்பாவிதத்தை தவிர்க்க 1 லட்சம் போலீசார் தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். வாக்கு எண்ணும் மையங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்னும் சற்று நேரத்தில் எண்ணப்படும் நிலையில், வாக்கு எண்ணும் மையங்களில் 3 முதல் 5 அடுக்கு வரை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் சுமார் 22,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.” “சற்று நேரத்தில் தொடங்கும் வாக்கு எண்ணிக்கை: பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் போலீசார்”
“சட்டசபை தேர்தலுக்கான ஒவ்வொரு சுற்று வாக்குகள் எண்ணிக்கையின் அதிகாரப்பூர்வ முடிவுகளும் தேர்தல் நடத்தும் அதிகாரியால் வெளியிடப்படும். அதிகாரப்பூர்வ இறுதி முடிவுகள் வெளியாக மாலை முதல் நள்ளிரவு வரை ஆகலாம் என்று தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கான வெற்றிச்சான்றிதழை தேர்தல் நடத்தும் அதிகாரி வழங்குவார்.
சென்னையில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை சென்னை ராணிமேரி கல்லூரி, லயோலா கல்லூரி மற்றும் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 3 மையங்களில் நடக்கிறது.
இங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.காலை 6 மணி முதலே வாக்கு எண்ணும் தேர்தல் அதிகாரிகள் மற்றும் முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டு முகவர்கள் முன்னிலையில் வாக்குகளை எண்ணுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கப்படும். காலை 11 மணி முதல் முன்னிலை நிலவரம் தெரியவரும்.
“சட்டசபை தேர்தல் முடிவுகள்.. காலை 11 மணிக்கு முன்னிலை நிலவரம்..?
தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு எந்திரங்களில் உள்ள ஓட்டுகளை எண்ணுவதற்கு தனித்தனியாக மேஜைகள் போடப்பட்டுள்ளன.இதில் அதிக மேஜை போடப்பட்டுள்ள தொகுதிகள் வருமாறு:-மாதவரம்-28, சோழிங்கநல்லூர்-24, ஆவடி, பூந்தமல்லி, கவுண்டம்பாளையம் தலா 20, மற்ற தொகுதிகளில் 14 மேஜைகள் மட்டும் போடப்பட்டிருக்கும். கிணத்துக்கடவு மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதிகளில் தலா 5 வேட்பாளர்கள், ஊட்டி, கூடலூர், குன்னூர், வால்பாறை, மதுரை தெற்கு தலா 6 வேட்பாளர்கள், கீழ்வேளூரில் 7 வேட்பாளர்கள் மட்டும் போட்டியிடுவதால் விரைவில் முடிவுகள் தெரிய வாய்ப்பு உள்ளது. அதேபோல், சோழிங்கநல்லூர் தொகுதியில் 703 வாக்குச்சாவடிகள் உள்ளன. கரூர் தொகுதியில் 79 வேட்பாளர்கள் களத்தில் இருப்பதால் முடிவுகள் கடைசியாகத்தான் தெரியவரும்
“விரைவில் முடிவுகள் தெரியும் தொகுதிகள்.. கடைசியாக முடிவுகள் தெரியவரும் தொகுதிகள் எவை, எவை..?
வாக்கு எண்ணிக்கை மையங்களில் குறைந்தபட்சம் 14 மேஜைகள் முதல் அதிகபட்சமாக 24 மேஜைகள் வரை போடப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை மற்றும் மேஜைகளை பொறுத்து சுற்றுகளின் எண்ணிக்கை மாறுபடும். பெரிய தொகுதிகளில் அதிக மேஜைகள் போடப்படலாம் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே சில தேர்தல்களில் 30 மேஜைகள் வரை போடப்பட்டுள்ளன. எனவே இதுபோன்ற பெரிய தொகுதிகளில் அதிக மேஜைகள் போடப்படுவதால் வாக்கு எண்ணிக்கை சுற்றுகளும் அதிகரித்து முடிவுகள் முழுமையாக வெளியாக நள்ளிரவு வரை ஆகலாம் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். சிறிய தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை முடிவு ஓரளவு பிற்பகல் 3 மணியளவில் தெரியவாய்ப்பு உள்ளது.முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இதைத்தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. தபால் வாக்குகளை எண்ணுவதற்காக தனி மேஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. ஒவ்வொரு மேஜையிலும் தலா 500 தபால் ஓட்டுகள் எண்ணப்படும்.
பரபரப்பாகும் அரசியல் களம்: தேர்தல் முடிவுகள் எப்போது தெரிய வரும்?”,
:”காலை 8 மணிக்கு முன்பு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் சீல் அனைத்து வேட்பாளா்கள் முன்னிலையில் அகற்றப்படும். இதைத் தொடா்ந்து, காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கும். 8.30 மணியளவில் மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கப்படும்.முதல் சுற்று எண்ணிக்கை முடிக்கப்பட்டு முன்னிலை விவரங்கள் 9 மணிக்கு தெரிவிக்கப்படும். இதைத் தொடா்ந்து, அடுத்தடுத்த சுற்றுகளின் முடிவுகள் வெளியிடப்படும்.
தமிழகத்தில் 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தாலும் 4 கோடியே 87 லட்சத்து 99 ஆயிரத்து 885 பேர் மட்டும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இதுதவிர 5 லட்சத்து 80 ஆயிரத்து 384 தபால் வாக்குகளும் பதிவாகி உள்ளன. இந்த வாக்குகள் இன்று எண்ணப்பட உள்ளன.இதற்காக தமிழகம் முழுவதும் 62 மையங்கள் தயார் நிலையில் உள்ளன. அனைத்து மையங்களிலும் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.அங்கு குறைந்தபட்சம் 14 மேஜைகள் முதல் அதிகபட்சமாக 24 மேஜைகள் வரை போடப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை மற்றும் மேஜைகளை பொறுத்து சுற்றுகளின் எண்ணிக்கை மாறுபடும். வாக்கு எண்ணிக்கை: தயார் நிலையில் 62 மையங்கள்”,
:”தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தல் களத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க., பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி என இருபெரும் அணிகளுடன், தமிழக அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சியும் இறங்கின.இது தவிர டாக்டர் ராமதாஸ், சசிகலா இணைந்து ஒரு கூட்டணி அமைத்தும் போட்டியிட்டனர். இருப்பினும் களத்தில் 4 முனை போட்டி ஏற்பட்டது. அதிலும் தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க. கட்சிகளிடையே கடும் போட்டி இருந்ததை காணமுடிந்தது.
அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுடன், சுயேச்சை வேட்பாளர்களும் சேர்ந்து 234 தொகுதிகளிலும் 4 ஆயிரத்து 23 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர். பிரசாரம், ரோடு ஷோ என பரபரப்பான காட்சிகளுடன் இந்த தேர்தல் திருவிழா அமைதியாக நடந்து முடிந்தது.அரியணையில் அமரப்போவது யார்..? தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் 62 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்ததைய கருத்துக்கணிப்புகள் வெளிவந்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.இந்தநிலையில் 234 சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று (திங்கட்கிழமை) எண்ணப்படுகின்றன. இதன் முடிவில் யார் அரியணையில் அமரப்போகிறார்கள் என்பது தெரியவரும்.





