குருநாகல் – நாரம்மலை பிரதேசத்தில் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்று(20.05.2026) இடம்பெற்றுள்ளது.
அதி வேகமாக மோட்டார் சைக்கிள்களைச் செலுத்தியமையே இந்த விபத்துக்குக் காரணம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில், ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த நாரம்மலை பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய, இரண்டு பிள்ளைகளின் தாயாரே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அதே பிரதேசத்தைச் சேர்ந்த 28 மற்றும் 34 வயதுடைய உறவினர்களான இரு ஆண்களே மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில், விபத்தில் படுகாயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




