கனடாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண்

கனடாவில் கல்வி கற்றுவந்த இந்திய இளம்பெண்ணொருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார். இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவரான விதி (Vidhi Kalpeshbhai Meghani, 22) என்னும் இளம்பெண், நான்கு ஆண்டுகளாக கனடாவில் கல்வி பயின்றுவந்துள்ளார்.

இந்நிலையில், கனடாவின் நயாகரா பகுதியில் மர்ம நபர் ஒருவர் விதியைக் கத்தியால் குத்திக் கொன்றுள்ளார்.

 

கொள்ளை முயற்சியின்போது விதி கொல்லப்பட்டிருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.

இந்த துயர சம்பவம், இம்மாதம், அதாவது, மே மாதம் 15ஆம் திகதி நிகழ்ந்த நிலையில், மகள் கொல்லப்பட்ட விடயம் குறித்து அவரது பெற்றோருக்குத் தெரியாமலே இருந்துள்ளது.

படித்துக்கொண்டே பகுதி நேர வேலையும் பார்த்துவந்ததால் மகள் பிஸியாக இருக்கக்கூடும் என அவர்கள் எண்ணிக்கொண்டிருந்த நிலையில், கனடாவிலிருந்து பொலிசார் அழைத்தபிறகுதான் அவர்களுக்கு தங்கள் மகள் உயிரிழந்த விடயம் தெரியவந்துள்ளது.

கனடாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் | Student From Gujarat Stabbed To Death In Canada

விதியைக் கொலை செய்த நபரை பொலிசார் தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.