கோட்டாபய ராஜபக்‌ஷ தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நாளை

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தாக்கல் செய்துள்ள எழுத்தாணை மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த மனு நாளை (18) புதன்கிழமை மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.இந்த மனு இன்றைய தினம் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான ரொஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது மனு தொடர்பான மேலதிக பரிசீலனைகளுக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், குறித்த மனு நாளை மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான ரொஹந்த அபேசூரிய மற்றும் சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.