ரஞ்சித் ஆண்டகை குறித்து வெளியான செய்தி பொய்யானது – கத்தோலிக்க திருச்சபை

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் குறித்து பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை முன்கூட்டியே அறிந்திருந்ததாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி பொய்யானது என கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.

திருச்சபை மேலும் கூறுகையில், குண்டுத்தாக்குதலின் பின்னணியின் உண்மையைக் கண்டறிவதற்காக முன்னெடுக்கும் விசாரணைகளை தடுக்க ஒரு தரப்பினர் திட்டமிட்ட வகையில் செயற்படுகிறார்கள்.

சமூக ஊடகங்களில் பரிமாற்றப்படும் இத்தகைய போலியான விடயங்களை நம்பவோ அல்லது பகிரவோ வேண்டாம் என்று பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறோம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.