நாட்டின் இருவேறு பகுதிகளில் நேற்று செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்ததோடு, இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பதுளை – தென்னபங்குவை வீதியில் வெலிஹித பிரதேசத்தில் பதுளை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி மற்றும் பின் இருக்கையில் பயணித்த 2 பெண்கள் காயமடைந்து பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 59 வயதுடைய பதுளை பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், கெஸ்பேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெஸ்பேவ – கொட்டாவ வீதியில் கெஸ்பேவ நகரில் கொட்டாவ நோக்கி பயணித்த பேருந்து ஒன்று வீதியை கடக்க முயன்ற பெண் ஒருவர் மீது மோதி விபத்துள்ளகியுள்ளார்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த பெண் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கெஸ்பேவ பிரதேசத்தை சேர்ந்த 81 வயதுடைய பெண்ணொருவர்.
விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.





