அவுஸ்திரேலியாலின் ஏற்றுமதி நிறுவனத்துக்கு திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மூன்றாம் தரப்பினரால் மோசடி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணைகள் இதுவரையில் நிறைவடையவில்லை. தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
அவுஸ்திரேலிய கடன் வழங்குநர் தரப்புக்கு திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மூன்றாம் தரப்பினரால் மோசடி செய்யப்பட்ட விவகாரம் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பில் நிதியமைச்சு உள்ளக விசாரணைகளை மேற்கொண்டு திறைசேரியின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் 4 அதிகாரிகளை பணி நீக்கம் செய்தது.இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்ட அதிகாரியான ரங்க நிஷாந்த மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இந்த மோசடி தொடர்பில் நிதி பிரதி அமைச்சர் அனில் பெர்னாண்டோ குறிப்பிடுகையில், 2.5 மில்லியன் டொலர் மூன்றாம் தரப்பினரால் மோசடி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணைகள் இதுவரையில் நிறைவடையவில்லை. தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த விவகாரம் குறித்து தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. கொழும்பு வாணிப மேல் நீதிமன்றத்துக்கு ‘பி’ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.





