சந்நிதியான் ஆச்சிரமத்தால் 25 கர்ப்பிணித் தாய்மார்களுக்குச் சத்துணவுப் பொருட்கள் கையளிப்பு

பருத்தித்துறைப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஜே-383 தொண்டைமானாறு தெற்கு, ஜே- 385 கெருடாவில் தெற்கு, ஜே -386 கெருடாவில் வடக்கு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட 25 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சத்துணவுப் பொருட்கள் சந்நிதியான் ஆச்சிரம  நிர்வாகத்தால் புதன்கிழமை (24.06.2026) சந்நிதியான் ஆச்சிரமத்தில் வைத்துக் கையளிக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபா பெறுமதியான சத்துணவுப் பொருட்களே இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளன.