வரலாற்றுச் சிறப்பு மிக்க இணுவில் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந் திருவிழாவின் திருமஞ்சத் திருவிழா புதன்கிழமை (01.07.2026) இரவு சிறப்பாகவும், பக்திபூர்வமாகவும் நடைபெற்றது.
இதன்போது ஆயிரக்கணக்கான அடியவர்கள் புடைசூழ உலகப் பெருமஞ்சத்தில் இணுவில் கந்தப் பெருமான் வீதி உலா வந்தார்.






