மன்னார் இரணை இலுப்பைக்குளம் தமிழ் மகாவித்தியாலயத்தின் சிறந்த அதிபராகக் கடமையாற்றி வந்தவரும், வவுனியா மரக்காரம்பளை மண்ணைச் சேர்ந்தவருமான ந.கோபு இன்று திங்கட்கிழமை (06.07.2026) திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
இவர் யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியல் கல்லூரியின் முன்னாள் ஆசிரிய மாணவனுமாவார்.


