கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் வாராந்த விசேட ஒன்றுகூடல் மரபுத் தமிழ் இலக்கியங்கள் குறித்து விழிப்புணர்வு வழங்கும் நிகழ்வாக நேற்றுப் புதன்கிழமை (08.07.2026) கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் ரதிலட்சுமி மண்டபத்தில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் பிரதி முதல்வர் கணபதிப்பிள்ளை செந்தில்குமரன் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் அகில இலங்கை இளங்கோ கழக அமைப்பாளரும், வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி ஆசிரியருமான பரா.ரதீஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இலக்கியம் காட்டிய மானிட அளவு கோல் எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். கலாசாலையின் தமிழ்ப் பாடநெறி விரிவுரையாளரும், கவிஞருமான வேல்.நந்தகுமார் அதிதிக்கான அறிமுக உரையை வழங்கினார். அதிதிப் பேச்சாளர் கலாசாலை முகாமைத்துவக் குழுமத்தினரால் கெளரவிக்கப்பட்டார்.





