அத்துருகிரிய விபத்து: பேருந்து – டிப்பர் மோதலில் 20 பேர் காயம்; போக்குவரத்தும் பாதிப்பு

அதிகாலை 4.15 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தினால் குறித்த வீதியூடான போக்குவரத்து இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் காயமடைந்தவர்கள் ஒருவல மற்றும் ஹோமாகம ஆதார வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, விபத்துக்குள்ளான பஸ்ஸின் சாரதி வாகனத்திற்குள் சிக்கிய நிலையில், ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளின் பின்னர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோதலில் பேருந்து மற்றும் டிப்பர் வாகனம் இரண்டும் பலத்த சேதமடைந்துள்ளன.

சம்பவம் தொடர்பில் அத்துருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.