நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் அறிவுறுத்தலுக்கு இணங்க வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறைச்சாலைகளின் தற்போதைய நிலைமைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் விசேட அவசரக் கலந்துரையாடல் இன்று புதன்கிழமை (05.08.2026) மாலை யாழ்.சுண்டுக்குளியில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்றது.
மேற்படி அவசரக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், வடக்கு மாகாணச் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், பிரதிப் பொலிஸ்மா அதிபர், 512 ஆவது இராணுவக் கட்டளைத் தளபதி, யாழ்ப்பாணம் பிரதேச செயலர், சிறைச்சாலை அத்தியட்சகர் மற்றும் அதிகாரிகள், வடக்கு மாகாண ஆளுநரின் உதவிச் செயலாளர், வடக்கு மாகாண ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர், யாழ்.மாவட்டச் செயலகத் திட்டமிடல் பணிப்பாளர், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.






