இன்று(26) யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இருந்து யாழ். பேருந்து நிலையம் வரை அமைதி பேரணி இடம்பெற்றது.
இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் ஊடக அமையமும் இணைந்து ‘கருத்து அடக்குமுறைக்கு எதிராவோம் ‘ என்னும் தொனிப்பொருளில் இவ் அமைதி பேரணி இடம்பெற்றது.
இப் பேரணியில் வடக்கு ஊடகவியாளர்கள் சமூக செயற்பாட்டளர்கள் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளார் ஜோசப் ஸ்ராலின் மற்றும் ஆசிரிய பிரதி நிதிகள் . குரல் அற்றவர்களின் குரல் அமைப்பினர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.






