இலங்கை பொலிஸாரால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் சிலாபம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, மாரவில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவில பிரதேசத்தில், சட்டவிரோத மதுபானத்தை காரில் கடத்திச் சென்ற சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாரவில பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடம் இருந்து 112 லீற்றர் சட்டவிரோத மதுபானம் (150 போத்தல்கள்) பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து கைதானவர் மேலதிக விசாரணைகளுக்காக மாரவில பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாரவில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






