இளவாலையில் கோலாகலப் பொங்கல் விழா

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் கோலாகலப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை (14.01.2025) மாலை-05.30 மணியளவில் இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலய மைதானத்தில் இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் செயலாளர் ம.மரியநாயகம் தலைமையில் சிறப்பாக இடம்பெறவுள்ளது.

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் பிரதம விருந்தினராகவும், கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முதல்வர் ச.லலலீசன், பற்சிகிச்சை நிபுணர் வைத்தியகலாநிதி ஆர்.விசாகரூபன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.