சிறிலங்கா கடற்படையின் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் டாமியன் பெர்னாண்டோவை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நியமித்துள்ளார்.
இதற்கான நியமனக் கடிதத்தை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொட நேற்று புதன்கிழமை (15) கடற்படைத் தலைமையகத்தில் வைத்து ரியர் அட்மிரல் பெர்னாண்டோவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்ததுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.



