கொஹுவலையில் துப்பாக்கிச் சூடு

கொஹுவலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட களுபோவில பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றிற்கு அருகில் துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (16) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

களுபோவில பிரதேசத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கி சூட்டின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.