பிரித்தானியக் காரை நலன்புரிச் சங்கத்தின் அனுசரணையில் காரைநகரைச் சேர்ந்த பல்வேறு பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்து நடாத்தும் காரைநகர்ப் பட்டறை நிகழ்வு- 2025 நாளை ஞாயிற்றுக்கிழமை (19.01.2025) காலை-09 மணி முதல் காரைநகரில் சலெஞ்செர்ஸ் விளையாட்டு மைதானத்தில் முழுநாள் நிகழ்வாக இடம்பெறவுள்ளதாக நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
காரைநகர்ப் பட்டறை நிகழ்வு தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு வியாழக்கிழமை(16.01.2025) முற்பகல் யாழ்பாடி விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
“ஊர் திரும்புதல்” என்கின்ற பிரதான கருதுகோளை முன்வைத்து ஊரின் கலை மற்றும் பாரம்பரியம், விவசாய வளர்ச்சி மற்றும் நீர் மேலாண்மை, பொருளாதார முன்னேற்றம், தொழில்நுட்பத்தின் பங்கு தொடர்பான பல விடயங்கள் இந் நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டு அவை தொடர்பாகப் பேசப்படவுள்ளன.





