வடமராட்சியில் அரசியல் கைதிகளின் விடுதலை கோரிக் கையெழுத்துச் சேகரிப்புப் போராட்டம்

நீண்ட காலமாகவும், சில வருடங்களாகவும் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு அரசிடம் கோரிக்கை விடுத்துப் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் கையெழுத்துச் சேகரிப்புப் போராட்டம்   சனிக்கிழமை (18.01.2025) யாழ்.வடமராட்சியின் சில பகுதிகளில் நடாத்தப்பட்டது.   
யாழ்.வடமராட்சி நெல்லியடி நகரிலும், பின்னர்  வல்வெட்டித்துறை, உடுப்பிட்டி, பருத்தித்துறை ஆகிய பகுதிகளிலும் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.