பொலன்னறுவையில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

பொலன்னறுவை, அரலகங்வில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எல்லேவெவ பகுதியில் உள்ள வயலில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரலகங்வில பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) இரவு இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் அரலகங்வில , எல்லேவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடையவர் ஆவார்.

சம்பவத்தன்று, இவர் வனவிலங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாப்பதற்காக வயலுக்குச் சென்றிருந்த போது காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.