விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) மாலை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் கண்டி, தெல்தெனிய, கென்கல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய வயோதிபர் ஆவார்.
சம்பவத்தன்று இவர் விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு மீன் பிடிக்கச் சென்றுள்ள நிலையில், நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் தெல்தெனிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





