முச்சக்கரவண்டி மோதி வயோதிபப் பெண் உயிரிழப்பு!

சிலாபம் – புத்தளம் வீதியில் வட்டக்களி பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று திங்கட்கிழமை (20) காலை இடம்பெற்றுள்ளது.

புத்தளத்திலிருந்து சிலாபம் நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியில் பயணித்த வயோதிபப் பெண் ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த வயோதிபப் பெண் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் சிலாபம் பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடையவர் ஆவார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.