24 ஆம் திகதி வங்களா விரிகுடாவில் புதிய காற்றுச் சுழற்சி!

எதிர்வரும்- 24 ஆம் திகதி வங்காள விரிகுடாவில் மீண்டும் ஒரு காற்றுச் சுழற்சி உருவாகும் வாய்ப்புள்ளது. இதன் காரணமாக எதிர்வரும்- 28 ஆம் திகதி முதல் 03 ஆம் திகதி வரை மீண்டும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல்துறைத் தலைவர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில்  திங்கட்கிழமை (20.01.2025) அவர் மேலும் தெரிவிக்கையில்,         

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் நிலவி வந்த மழையுடனான வானிலை நாளை முதல் படிப்படியாக குறைவடையும்.

21 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை வடக்கு- கிழக்கின் சில பகுதிகளுக்குச் சிறிய அளவிலான மழை கிடைக்கும். இக் காலப் பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் விவசாயிகள் தங்கள் அறுவடைச் செயற்பாடுகளை மேற்கொள்ளலாம். எனினும், மிதமான அளவிலான மழையை எதிர்கொள்வதற்கான ஒரு சில ஏற்பாடுகளுடன்( கூடார தாள் (தறப்பாள் வசதிகளுடன்) மேற்கொள்வது சிறந்தது. எதிர்வரும்- 22 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை குளிரான வானிலை நிலவும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.