இரத்தினபுரி, எஹெலியகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (20) கைது செய்யப்பட்டுள்ளதாக எஹெலியகொடை பொலிஸார் தெரிவித்தனர்.
எஹெலியகொடை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பரகடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடம் இருந்து 86 லீற்றர் சட்ட விரோத மதுபானம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எஹெலியகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





