கொழும்பில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

கொழும்பு, மட்டக்குளி பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவன் நேற்று திங்கட்கிழமை (20) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்குளி பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்குளி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு 14 பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய இளைஞன் ஆவார்.

சந்தேக நபரிடமிருந்து  25 கிராம் 210 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.