அரச உத்தியோகத்தர்களுக்கான தேசிய வலைப்பந்தாட்டப் போட்டியில் வெற்றியீட்டிய வீர, வீராங்கனைகளுக்கு யாழில் கெளரவிப்பு

அரச உத்தியோகத்தர்களுக்கான தேசிய வலைப்பந்தாட்டப் போட்டியில் வெற்றியீட்டிய வீர, வீராங்கனைகளுக்கான நிகழ்வு  செவ்வாய்க்கிழமை (21.01.2025) முற்பகல்-10 மணியளவில் யாழ்.மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் யாழ்ப்பாண வலைப்பந்தாட்டப் பயிற்றுனர் செல்வி. மனோன்மணி சின்னத்தம்பி தலைமையில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் யாழ்.மாவட்டப் பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.

இதேவேளை, அரச உத்தியோகத்தர்களுக்கான வலைப்பந்தாட்ட இறுதிப் போட்டியானது கடந்த வருடம் நவம்பர் மாதம்- 23 ஆம் திகதி மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. குறித்த போட்டியில் 40 வயதிற்கு மேற்பட்ட மற்றும் 40 வயதிற்கு உட்பட்ட பெண்கள் அணியினர் இரண்டாவது இடத்தினையும், ஆண்கள் அணி இரண்டாவது இடத்தினையும் பெற்றுக் கொண்டனர்.