உடன்பிறந்த அண்ணனை கொலை செய்துவிட்டு தலைமறைவான நபர் இன்று (23) வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
நேற்று (22) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில் தனது உடன்பிறந்த அண்ணனை அவரது தம்பி கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
43 வயதான உயிரிழந்த நபர் இரு பிள்ளைகளின் தந்தை ஆவார்.
இந்நிலையில், அண்ணனை கொலை செய்துவிட்டு தலைமறைவான நபரை வாழைச்சேனை பொலிஸார் இன்று பிறைந்துறைச்சேனையில் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.




