Lanka Exhibition & Conference Services Pvt. Ltd நிறுவனம் யாழ்ப்பாணம் வர்த்தகத் தொழில்துறை மன்றத்துடன் இணைந்து 15 ஆவது வருடமாக நடாத்தும் யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி-2025 நிகழ்வு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (24.01.2025) ஆரம்பமாகி ஞாயிற்றுக்கிழமை (26.01.2025) வரை முற்பகல்-10.30 மணி முதல் இரவு-08.30 மணி வரை யாழ்.முற்றவெளி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
கண்காட்சிக்கான ஏற்பாடுகள் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் தற்போது துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.





