சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேக நபரொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் செவ்வாய்க்கிழமை (21) கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கொழும்பு, மருதானை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு 09 பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 2,000 வெளிநாட்டு சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மருதானை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




