நாட்டில் முதலீடு செய்வதற்காக பெருமளவு முதலீட்டாளர்கள் தமது திட்டங்களை முன்வைத்துள்ளனர். அந்தத் திட்டங்கள் தொடர்பில் தற்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன நிதி மற்றும் திட்டமிடல் பிரதியமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார்.
பிங்கிரிய ஏற்றுமதி வலயம் உள்ளிட்ட முதலீட்டு வலயங்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் நளின் பண்டார வியாழக்கிழமை (23) சபையில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே பிரதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு உற்பத்தியை அதிகரிப்பது அவசியமாகும். இந்த வருடத்தில் மீண்டெழும் செலவினமாக 1,315 பில்லியன் ரூபா வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பிங்கிரிய ஏற்றுமதி வலயத்தின் வேலைத்திட்டங்கள் விரைவு படுத்தப்பட்டுள்ளதுடன் ஏனைய வலயங்களை இனங்காணுவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.



