யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபையால் வருடம் தோறும் நடாத்தப்படும் சைவநெறி மற்றும் தமிழ்மொழியும் நுண்ணறிவும் தேர்வுகள் சனிக்கிழமை (25.01.2025) காலை-08 மணியளவில் வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் இடம்பெறவுள்ளது.
குறித்த தேர்வுகளுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் தங்கள் பாடசாலைகள் ஊடாகப் பங்குபற்றுமாறு சைவபரிபாலன சபையின் பரீட்சைச் செயலாளர் வி.தயாபரன் தெரிவித்துள்ளார்.




