வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டயஸ் பிரதேசத்தில் ஐஸ், ஹெரோயின், ஹாஷ் போதைப்பொருள் வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு மத்தியப் பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது இருவர் நேற்று சனிக்கிழமை (25) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான சந்தேக நபர்கள் 49, 50 வயதுடைய வாழைத்தோட்டம் மற்றும் குணசிங்கபுர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
சந்தேக நபர்களிடமிருந்து 51 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ், 147 கிராம் 760 மில்லிகிராம் ஹெரோயின், 40 கிராம் 490 மில்லிகிராம் ஹாஷ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து, கைது செய்யப்பட்டவர்கள் வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைத்தோட்டம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



