குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பொது நிர்வாக அமைச்சின் முன்னாள் செயலாளர் பிரியந்த மாயாதுன்னவை பிணையில் விடுதலை செய்ய கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (30) உத்தரவிட்டுள்ளது.
பிரியந்த மாயாதுன்ன 2 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்றைய தினம் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



