இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் புகழுடலுக்கான இறுதிக் கிாியைகள் ஞாயிற்றுக்கிழமை (02.02.2025) காலை-08 மணி முதல் முற்பகல்-10 மணி வரை யாழ்.தெல்லிப்பழை மாவிட்டபுரம் பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றுப் பிற்பகல்-01 மணிக்கு அவரது புகழுடல் தகனக் கிாியைகளுக்காகக் கீாிமலை இந்து மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டுத் தகனம் செய்யப்படுமென அறிவிக்கப்பட்டு ள்ளது.






