பாதசாரிகள் கடவையை கடக்க முயன்ற மூதாட்டி வேனில் மோதி உயிரிழப்பு

கடுவலை – கொள்ளுப்பிட்டி வீதியில் முத்தெட்டுகொட பகுதியில் பாதசாரிகள் கடவையை கடக்க முயன்ற மூதாட்டி  ஒருவர் வேனில் மோதி உயிரிழந்ததாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (30) இடம்பெற்றுள்ளது.

கடுவெலயிலிருந்து கொள்ளுபிட்டி நோக்கி பயணித்த வேன் ஒன்று  பாதசாரிகள் கடவையை கடக்க முயன்ற மூதாட்டி  ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

படுகாயமடைந்த மூதாட்டி  கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

தலங்கம வடக்கு – துட்டகைமுனு மாவத்தையைச் சேர்ந்த 71 வயதுடைய மூதாட்டியே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில்  வேனின் சாரதி  கைது செய்யப்பட்டுள்ளதுடன், தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.