ஜே-119 கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட கொட்டைக்காடு வீதி, கோண்டாவில் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் இரத்தினம்மா எனும் மூதாட்டி கடந்த வியாழக்கிழமை (30.01.2025) தனது 102 ஆவது வயதில் காலமானார்.
குறித்த மூதாட்டியின் வாழ்க்கை முறையே அவரது நீண்ட ஆயுளுக்குக் காரணமெனக் குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர். நாளைய தினம் அன்னாரின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.



