உலக வங்கியின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சிரேஷ்ட பொருளியலாளர் அன்ரனி ஒபேசேகரா தலைமையிலான குழுவினர் யாழ்.மாவட்டப் பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனை இன்று புதன்கிழமை (05.02.2025) மாலை-04 மணியளவில் யாழ்.மாவட்டச் செயலர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
குறித்த சந்திப்பில் உலக வங்கியின் குழுவினர் யாழ்.மாவட்டத்தின் தற்போதைய சமூக- பொருளாதார முன்னேற்ற நிலைமைகள், மீள்குடியேற்ற நிலைமைகள், சுற்றுலாத்துறை மேம்பாடு மற்றும் இளைஞர் யுவதிகளின் வேலையில்லாப் பிரச்சினைகள் போன்ற விடயங்களை யாழ்.மாவட்டப் பதில் அரசாங்க அதிபரிடம் கேட்டறிந்து கொண்டனர்.






