யாழ்ப்பாணம் செம்மணியில் புதைக்கப்பட்டோர், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் தமிழ்மக்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக இடம்பெறும் தமிழ் இன அழிப்புக்குச் சர்வதேச நீதி வேண்டியும் மற்றும் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு சர்வதேச மேற்பார்வையுடனும், சர்வதேச நியமங்களுக்கு அமைய நடாத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியும் கனடியத் தமிழர் சமூகம், கனடியத் தமிழ் மாணவர் சமூகம் ஆகியன இணைந்து நடாத்திய மாபெரும் கண்டன மற்றும் கவன ஈர்ப்புப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை (06.07.2025) மாலை-03 மணியளவில் கனடாவின் ரொறன்ரோவில் அமைந்துள்ள டன்டாஸ் சதுக்கத்தில் இடம்பெற்றது.
இப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கனோர் கலந்து கொண்டு செம்மணியில் புதைக்கப்பட்டோருக்குச் சர்வதேச நீதி கோரிக் குரலெழுப்பினர்.


