1983 ஆம் ஆண்டு யூலை மாதம் 23 ஆம் நாள் இடம்பெற்ற தமிழின அழிப்பின் 42 ஆம் ஆண்டு நினைவு மற்றும் செம்மணி புதைகுழியினைக் கண்டித்த கவனயீர்ப்பு நிகழ்வு 23.07.2025 புதன்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு பிரான்சில் பாரிஸ் நகரில் Invalides பகுதியில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு அரசியற்றுறை மற்றும் தமிழ் இளையோர் அமைப்பும் இணைந்த ஏற்பாட்டில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் செம்மணி புதைகுழியை இளையோர்கள் தத்ரூபமாகக் கண்முன்னே காட்சிப்படுத்தி இருந்தமை அனைவரையும் உணர்வடையவைத்தது.
நினைவுரைகளும் இடம்பெற்றிருந்தன. நினைவுரைகள் பிரெஞ்சு மற்றும் தமிழ் மொழிகளில் இடம்பெற்றிருந்தன.
வெளிநாட்டவர்கள் பலரும் எமக்கு நடந்த துன்பங்களை ஆவலோடு கேட்டறிந்து கொண்டனர். அவர்களுக்கு பிரெஞ்சு மொழியிலான துண்டுப்பிரசுரமும் வழங்கப்பட்டது.
நிறைவாகத் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் கவனயீர்ப்பு நிகழ்வு நிறைவுகண்டது.