இணுவிலில் கலைவிழா

இணுவில் பொதுநூலகம் சிறுவர் திறன் விருத்தி மையத்தின் ஏற்பாட்டில் கலைவிழா-2024 ஞாயிற்றுக்கிழமை (12.01.2025) காலை-08.30 மணிக்கு இணுவில் பொதுநூலக கலாசார மண்டபத்தில் இணுவில் பொதுநூலகத் தலைவர் ம.கஜந்தரூபன் தலைமையில் நடைபெறும்.

இந் நிகழ்வில் வடக்கு மாகாண முன்பிள்ளைப் பருவ அபிவிருத்திப் பிரிவின் கல்விப் பணிப்பாளர் த.முகுந்தன் பிரதம விருந்தினராகவும், யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியின் டிப்ளோமாக் கற்கை நெறிகள் பகுதித் தலைவர் பொ.ஜெனார்த்தனன், மென்பொறியியலாளர் இ.ராகவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.