உடுப்பிட்டி இமையாணன் மேற்கில் புதிதாகத் திறக்கப்பட்ட மதுபானசாலையை அகற்றக்கோரி உடுப்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த 32 பொது அமைப்புக்கள் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம்-06 ஆம் திகதிக்குத் தவணையிடப்பட்டுள்ளது.
குறித்த வழக்குப் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் பொன்னுத்துரை கிருசாந்தன் முன்னிலையில் இன்று புதன்கிழமை (29.01.2025) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. குறித்த வழக்கில் வழக்காளிகளாகப் பொது அமைப்புக்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுடனுடன் புரேந்திரன், சந்திரசேகரம் ,மயூரன், பெனிஸ்லஸ் துஷாந், ஆன் குலநாயகம் ஆகியோரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.





