உஹன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாளிகாதென்ன பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டியதாக கூறப்படும் இருவர் நேற்று திங்கட்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளதாக உஹன பொலிஸார் தெரிவித்தனர்.
உஹன பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் உஹன பிரதேசத்தைச் சேர்ந்த 50 மற்றும் 61 வயதுடையவர்கள் ஆவர்.
சந்தேக நபர்களிடம் இருந்து புதையல்தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை உஹன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



