கம்பஹாவில் சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் ஒருவர் கைது

கம்பஹா மாவட்டம் பமுனுகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உஸ்வெட்டகெய்யாவ பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் சந்தேக நபரொருவர் நேற்று புதன்கிழமை (15) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக பமுனுகம பொலிஸார் தெரிவித்தனர்.

பமுனுகம பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கம்பஹா , உஸ்வெட்டகெய்யாவ பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபர்களிடமிருந்து 67 லீற்றர் 500 மில்லி லீற்றர் சட்டவிரோத மதுபானம் மற்றும் 189 லீற்றர் கோடா என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பமுனுகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.