அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கிட்டங்கி வீதியில் அமைந்துள்ள கல்முனை தமிழர் கலாசார பேரவை வளாகத்திலுள்ள திருவள்ளுவர் சிலையானது பொலிஸாரின் பாதுகாப்பிற்கு மத்தியில் ஞாயிற்றுக்கிழமை (19) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த திருவள்ளுவர் சிலை நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்ட நிலையிலும் பல சர்ச்சைக்கு மத்தியிலும் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் மேலாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜீ , வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே அதிசயராஜ் மற்றும் கல்முனை தமிழர் கலாசார அபிவிருத்தி பேரவை உறுப்பினர்கள் உட்பட கல்முனை பிராந்திய இளைஞர் அமைப்புகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.









