களுத்துறை, இங்கிரிய பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் இளைஞன் ஒருவன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவித்தனர்.
இங்கிரிய பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹந்தபான்கொட பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடைய இளைஞன் ஆவார்.
சந்தேக நபரிடம் இருந்து 50 லீற்றர் (67 போத்தல்கள் ) சட்டவிரோத மதுபானம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இங்கிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





