குருணாகலில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று செவ்வாய்க்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் குருணாகல், மல்கடுவாவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்  போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் குருணாகல், மல்கடுவாவ பிரதேசத்தைச் சேர்ந்த 31 மற்றும் 42 வயதுடையவர்கள்  ஆவார்.

சந்தேக நபரிடமிருந்து 3,600 வெளிநாட்டு சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக குருணாகல் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குருணாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.